தலவாக்கலை கிரேட்வெஸ்டன் காட்டில் காட்டுத் தீ!
தலவாக்கலை கிரேட்வெஸ்டன் காட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த விமானம் மூலம் நீர் இறைக்கப்பட்ட போதிலும் அது பயனளிக்கவில்லை என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை கிரேஸ்வெஸ்டன் காட்டுப்பகுதியில் நேற்று (12) 11.30 மணியளவில் திடீரென தீ பரவிய நிலையில் தலவாக்கலை பொலிஸ், அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் அது பலனளிக்காத நிலையில் ஹெலிகொப்டர் உதவியுடன் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை பெற்று சுமார் ஐந்து தடவைகள் நீர் பாய்ச்சிய போதும் தீயை கட்டுபடுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், தொடர்ந்து தீ பற்றி எரிவதால் சுமார் 10 ஏக்கர் வரையிலான காடு நாசமாகியுள்ளதுடன் தீயை கட்டுத்த முயற்சித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.