முடங்கியது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா !!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா முடக்கப்படுகிறது.


பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூரேற் (Rodrigo Duterte) இன்று வியாழக்கிழமை இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

உலகநாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடுமையான குடிவரவுக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் மணிலாவுக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்று கூடுவதற்கான தடை மற்றும் பாடசாலைகளை ஒரு மாதத்திற்கு மூடுவது, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், மணிலாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணங்களை நிறுத்துவது உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டு பேர் உயிரிழந்தனர். மற்றும் 53 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
Blogger இயக்குவது.