மறு அறிவித்தல் வரை சில விமான சேவைகள் ரத்து!!
மறு அறிவித்தல் வெளிவரும் வரை ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளின் விமானசேவைகளை ரத்து செய்துள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்....
நாட்டில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு ஈரான் , இத்தாலி , தென் கொரியா ஆகிய நாடுகளின் விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரும் வரை குறித்த தடை அமுலில் இருக்கும்.
ஈரான் , மற்றும் இத்தாலியில் இருந்து வரும் விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து சில நாட்களில் இறுதியாக விமானமொன்று இலங்கை வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு சீனாவில் தற்போது கொரோனா வைரஸின் வேகம் குறைவடைந்துள்ளதால் , சீனர்கள் இலங்கைக்கு வருவதை தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை.
எனினும், சீனாவில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்டுகிறார்கள் என்றார்.