வெளியானது 'பிகில்' நடிகையுடன் கவின் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் கவின். இவர் தனது சக போட்டியாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக போட்டியில் இருந்து விலகி தியாகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது முதல் முறையாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி கவின் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

முதல்கட்டமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ’லிஃப்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவின் ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் நடித்து வருகிறார். இவர் பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரத்தத்தின் நடுவில் கவின் மற்றும் அம்ரிதா அய்யர் லிப்டில் உட்கார்ந்திருப்பதை பார்க்கும்போதே இது ஒரு சஸ்பென்ஸ் அடங்கிய த்ரில் படம் என்பது தெரிய வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.