அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைத்தால் கடும் நடவடிக்கை- யாழ். அரசாங்க அதிபர் அறிவிப்பு!!
அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாவட்டத்தில் எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் மக்கள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அதிகளவான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இது தேவையில்லாத ஒரு விடயம். கொழும்பிலிருந்து பொருட்கள் வழமைபோன்று யாழிற்கு எடுத்துவரப்படுகின்றன.
அதைவிட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களைத் தாராளமாக வழங்குமாறும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்குமாறும் நான் தற்பொழுது கூட்டுறவுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன்.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களைப் பதுக்கிவைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். எனவே பொதுமக்கள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சகல பொருட்களும் கொழும்பிலிருந்து வழமைபோல் கொண்டுவரப்படும். எனினும் அவ்வாறு ஒரு பிரச்சினை ஏற்படுமிடத்து அதிகாரிகளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo