கொரோனா தொற்று - கனடா பிரதமர் மற்றும் மனைவி பரிசோதனை!!
லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய பின்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபி கிரேகோயரோவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் பிரித்தானியா சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய கிரேகோயர் தற்போது, COVID-19 க்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து வெளியான ஒரு அறிக்கையில் அவரது அறிகுறிகள் குறைந்துவிட்டன எனவும், ட்ரூடோ தற்போது கொரோனா வைரஸால் ஏற்படும் நோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அவருடைய மனைவி சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரூடோ அடுத்த இரண்டு நாட்களில் ஒட்டாவாவில் மாகாண அதிகாரிகள் மற்றும் முதல் நாடுகளின் தலைவர்களுடன் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது அந்த கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.