‘தமிழன் ஆள’ ரஜினியை வரவேற்கிறேன்: பாரதிராஜா சூசகம்!

ரஜினி பத்திரிகையாளர்களைக் கூட்டி, தனது அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் கொள்கைகளையும் விளக்கியதற்கு ஆதரவும், விமர்சனமும் ஒருசேர வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிலர் ரஜினியின் இந்த விளக்கங்களை நகைச்சுவையாகவும், சிலர் சீரியஸாக விவாதித்துக் கொண்டும் இருக்க அதனைப் புதிய முறையில் அணுகி ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.


ரஜினியின் விளக்கத்தில் கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்று கூறியதைக் குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, “தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன்

என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு,

ஆகியவற்றின் மூலம்

பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.

ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்” என்று அவரது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜினி உருவாக்கும் கட்சிக்கு அவரே தலைவராக இருந்துகொள்ளட்டும், ஆனால் அந்தக் கட்சி ஆட்சியமைத்தால் முதல்வர் பதவியில் அமர்ந்து ஆளக்கூடிய ஒருவன் தமிழனாகவே இருக்கவேண்டும். அதைத்தான் ரஜினி குறிப்பிட்டிருக்கிறார் எனக் கூறியிருப்பதன் மூலம் ‘தமிழனைத் தமிழனே ஆளவேண்டும்’ என்று பல வருடங்களாக சொல்லிவரும் கூற்றினை உட்புகுத்தியிருக்கிறார் பாரதிராஜா. பாரதிராஜாவின் முழு அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட,

'ரஜினி' என்ற மனிதம்

எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.

இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.

தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன்

என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு,

ஆகியவற்றின் மூலம்

பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.

ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த

மனிதனாக, ரஜினியின் 'நாணய அரசியலில்' அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்.

அன்புடன்,

பாரதிராஜா.

-சிவா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.