கழிவுத் தேயிலையுடன் மன்னாரில் மூவர் கைது!
மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலையுடன் மூவர் கைதாகியுள்ளனர்.
கழிவுத் தேயிலை மூடைகளை வங்காலையில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கடற்படையினரும், வங்காலை பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
சொகுசு வாகனம் ஒன்றில் பின் இருக்கைகள் அகற்றப்பட்டு பதுக்கி வைக்கப்பட்ட கழிவுத் தேயிலை மூடைகளை வங்காலையூடாக மன்னார் பகுதிக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தபோதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 8 மூடைகளில் அடைக்கப்பட்ட பாவனைக்கு உதவாத 224 கிலோக்கிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டதுடன் வாகனத்தில் பயணித்த முசலி பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக, கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo