கொரோனா: சோனாக்‌ஷி பகிர்ந்த முக்கிய தகவல்!

கொரோனா வைரஸுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய மக்கள் முதல் கனடா பிரதமரின் மனைவி, பிரபல திரைப்பட நடிகர்கள் வரை பலரும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும், வராமல் பாதுகாக்கவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். இதன் காரணமாக அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரஸ் குறித்த பல்வேறு தவறான வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது மக்களை மேலும் பயத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து பதிவிட்டுள்ளார்.
As the world battles , let's ensure we do not add to the pandemic by circulating unverified information. Be safe, take necessary precautions and also be responsible. Don't add to the panic. Last but not the least, try and make the most of the compulsory 'me' time
View image on Twitter
இதைப் பற்றி 255 பேர் பேசுகிறார்கள்
அவர் தனது பதிவில், “உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருகிறது. உண்மைத்தன்மை சரிபார்க்காத எந்தத் தகவலையும் யாரும் பரப்ப வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். பயத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ள வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனாக்‌ஷியின் இந்தப்பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.