வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா!!

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளீயாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. பிரகாஷ் கோவலமுடி ஏற்கனவே திருமணமாகி மனைவியிடம் விவாகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படம் உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார்.


இந்த நிலையில் தனது திருமணம் குறித்து நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் தற்போது விளக்கமளித்துள்ளார். தனது திருமணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும் அதுபோன்ற ஐடியா தனக்கு எப்போதும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் திருமணம் என்பது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் தனது திருமணம் குறித்து ஏன் இவ்வாறு பல வதந்திகள் வெளியாகி வருகிறது என்று எனக்கு புரியவில்லை என்றும் தனது திருமணம் குறித்த செய்திகளுக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் மாதவனுடன் அனுஷ்கா நடித்த ’நிசப்தம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.