திருகோணமலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
திருகோணமலை, இலிங்கநகர் பகுதியில் உள்ள கலப்பு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலிங்கநகர், முதலாம் ஒழுங்கையைச் காத்தீபன் எனும் 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மனைவியோடு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் கண் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் கலப்பு பகுதியில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் மீட்கப்பட்ட சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo