இயக்குனர் பேரரசுவின் பரபரப்பான டுவீட்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகவும் விவாதமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ரஜினி தீவிர அரசியலில் இறங்க போகின்றாரா? ஒதுங்க போகின்றாரா? என்பதுதான் ரஜினியின் தீவிர ரசிகர்களின் கேள்வியாகவும் உள்ளது.


இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பதவிவெறி பிடித்தவர் மத்தியில் பதவிக்கு ஆசைப்படாதவன் பைத்தியக்காரன்! மதவெறியை தூண்டிவிடுபவர் மத்தியில் மத ஒற்றுமையை விரும்புபவன் மடையன். மக்கள் மடையர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் மக்களுக்கு எழுச்சி வரவேண்டும் என்று நினைப்பவன் முட்டாள் வாழ்க தமிழகம்??’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பேரரசுவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பேரரசு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.