எதனால் கொரோனா - பதில் தருமா வைரஸ் தீவு!!
கொன்றுகுவிக்கும் கொரோனாவிற்கு பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. மனித குலத்திற்கும் கிருமிக்குமான போரில் மனிதனா? கிருமியா என்ற சமபலத்தாக்குதல் நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கின்றது. இது மூன்றாம் உலகப் போராகவே நோக்கப்படுகின்றது. மூன்றே மாதங்களில் உலகம் முழுமையும் ஸ்தம்பித்த ஒரு செயற்பாடு கொரோனாவினால் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றது. கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கு முயற்சியில் உலக நாடுகள் அனைத்துமே ஈடுபட்டிருந்தாலும் ஜேர்மன் நாட்டின் பக்கமே அனைவரும் ஒருமுறை தலைதிருப்பி பார்ப்பர் என்பது யதார்த்தம். காரணம், அங்குள்ள மிகப்பாரிய கிருமி ஆராய்ச்சி மையமே ஆகும்.
ஜேர்மன் நாட்டின் வடபகுதியில், போல்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரெம்ஸ் தீவில் தான் உலகின் மிகப் பழைமையான கிருமி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கிறது. அங்கு தான் கொலரா, எபேலா போன்ற அனைத்துவகை தொற்று நோய்களுக்குமான ஆராய்ச்சி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கொனோனாவுக்கான ஆராய்ச்சியும் இங்குதான் இடம்பெறுகின்றது. ஹிட்லரின் நாஜி அரசாங்கத்தால் இரசாயனப்போர் ஆராய்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம் இன்று புதிய நோய்க்கிருமிகளின் தன்மையையும், அவை மிருகங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆராய்வதில் முக்கிய பங்காற்றுகிறது!
மனிதனுக்கு பரவும் நோய்க்கிருமிகளை வளர்ப்பு பிராணிகளுக்கு செலுத்தி இங்கு செய்யப்படும் ஆராய்ச்சிகள் நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு மட்டுமல்லாது வருங்காலங்களில் புதிதாய் பரவும் நோய்களை விரைவாகக் கட்டுப்படுத்தவும் இன்றியமையாதவைகளாகும்.
இரும்புக் கம்பி வேலி, முள் கம்பி சுருள் பாதுகாப்பு போன்ற பல அடுக்கு பாதுகாப்புடன் திகழும் இத்தீவில் நூற்றுக்கணக்கான வைரஸ் கிருமிகள் அவற்றின் தன்மையைப் பொறுத்து நான்கு வகைகளாய் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இரண்டாம் வகையிலிருந்து நான்காம் வகை வரையிலான ஆபத்தான கிருமிகள் பல கதவுகளை கொண்ட காற்று புகாத அறைகளில், மைனஸ் எண்பதிலிருந்து மைனஸ் நூற்று தொண்ணூறு டிகிரி குளிரூட்டப்பட்ட கலன்களில் உறைநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
மிகக்கொடிய நான்காம் வகை கிருமிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நுழையும் அனுமதி இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தொடங்கி ஒரு பத்து பேருக்கு மட்டுமே உண்டு. அவர்களும் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோடியாய் செல்பவர்களுக்கு காற்றழுத்தத்துடன் கூடிய கவச உடை, அந்த உடையை கழற்றுவதற்கு முன்னால் வெளியேறும்போது பெனோல் எனப்படும் கார்போலிக் ஆசிட் கலந்த குளியல் என பல கட்டாயங்கள் உண்டு.
இத்தீவில் உபயோகப்படுத்தப்பட்ட எந்த ஒரு பொருளும் முழுமையான கிருமி நீக்கத்துக்குப் பிறகே வெளியே அனுப்பப்படும். கிருமி நீக்கத்தில் சிறு சந்தேகம் எழுந்தாலும் அந்தப் பொருள் அத்தீவிலேயே மின்சாரத்தின் மூலம் பொசுக்கப்பட்டுவிடும் !
இத்தனை பாதுகாப்புகள் உள்ளதனால் இத்தீவுக்கு ``வைரஸ்களின் அல்கட்ராஸ் சிறைச்சாலை" என்ற பெயரும் உண்டு.
ஜேர்மனியில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகளை சோதனைச் சாலையில் செயற்கை முறையில் பெருக்கி, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் மிருகங்களின் உடல்களில் செலுத்தி சோதனைகளை ஆரம்பித்துவிட்டது பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையம்!
மனித குலத்தின் போராட்டம் என்பது ஏலவே பலவற்றுடன் அமைந்துவிட்டதனால் கொரோனாவுக்கான இந்தப் போரும் நிச்சயமாக வெற்றியைத்தரும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் மனிதனை மனிதன் அழிக்கும் அவலத்தினை இனியேனும் கைவிடாவிட்டால், ஒற்றுமையான உலகத்திற்காக அனைவரும் ஒன்றுபடாவிட்டால் கிருமியின் அழிவில் முழு உலகமுமே அழிந்துவிடுவதற்கான சாத்தியங்கள் அதிகமே ஆகும்.
தமிழரசி
தமிழருள் இணையத்தளம்.
உசாத்துணை - -காரை அக்பர்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo