சி.ஐ.டி.யில் ஆஜராக ரிஷாத்துக்கு அழைப்பு!

எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளியன்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் சிஐடி இற்கு அழைகபட்டுள்ளார்.


கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் அவரை ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

இதற்கான அறிவித்தலானது கறுவாத்தோட்டம் பொலிஸார் ஊடாக அனுப்பட்டுள்ளதகவும் கூறப்படுகின்றது.

ச.தொ.ச நிறுவனத்தின் ஆவணங்கள் பலவற்றை மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் கைக்கு கிடைகக் செய்தமை, மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் 7,340 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தான விசாரணைகளுக்காக ரிஷாத் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.