சிரியாவில் போர் சூழலில் பிறந்த 40 லட்சம் குழந்தைகள்- யுனிசெஃப் கவலை!

சிரியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் போர் சூழலில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) கவலை வெளியிட்டுள்ளது.



இதேவேளை சிரியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் 9,000இற்க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர்.

இதற்கிடையே சிரியாவின் கவலைக்குரிய நிலைக்குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ‘சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து வன்முறை நடந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் நடக்கும் போர் மற்றொரு அவமானகரமான எல்லையைத் தொட்டுள்ளது. சிரியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் போர் சூழலில் பிறந்துள்ளனர்.

லட்சக்கணக்கான குழந்தைகள் வன்முறை, போர், மரணங்களுக்கு இடையே அடுத்த தசாப்தத்திற்குள் நுழைகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.