கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


சில நாடுகளில் கொரோனா ரைவஸ் தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்துவதை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று அந்தந்த நாடுகளின் அதிகாரிகளுக்கு தெரியாவிட்டால், அவர்களால் தொற்றுநோயைத் தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் நாயகம் Tedros Adhanom குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு வரும் நபர்களிடம் மாத்திரம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை கருத்திற் கொண்டு அவர் இந்த எசச்ரிக்கையை விடுத்துள்ளார்.

உங்களால் நேரடியாக நெருப்புடன் போராட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீயை மேலும் பற்றி எரிய இடமளிக்க வேண்டாம். பரிசோதனையின்றி இந்த நடவடிக்கை கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.