சடலமாக கணவன், தெரியாமல் மனைவி - நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர். 30 வயதான இவர் கடந்த 6 வருடங்களாக ஓமனில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஜாகீருக்கும், ஷிபானா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார்.


இதற்கிடையே, ஜாகீர் நேற்று வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடச் சென்றிருக்கிறார். விளையாடச் சென்ற சிறிதுநேரத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட்டு ஜாகீர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். உடனே நண்பர்கள் அவரை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் ஜாகீரின் உயிர் பிரிந்துவிட்டது.

ஆனால் இந்த விவரத்தை ஷிபானாவிடமிருந்து மறைத்துள்ளனர் ஜாகீரின் நண்பர்கள். காரணம், தற்போது ஷிபானா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மாறாக, ``ஜாகீருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம்.

ஜாகீர் இல்லாத நிலையில் இங்கு தனிமையில் இருக்க வேண்டாம்" என்று கூறி ஷிபானாவைக் கண்ணூருக்குத் திருப்பி அனுப்பவதற்குப் பேசியுள்ளனர் நண்பர்கள். ஆனால் ஜாகீரைப் பார்க்க வேண்டும் என்று ஷிபானாகூற ``கொரோனா பாதிப்பு என்பதால் அவரை இப்போது பார்க்க இயலாது. நீ ஊருக்குக் கிளம்பு" என்று சமாளித்துள்ளனர்.

ஷிபானாவும் இதை ஏற்றுக்கொண்டு ஊருக்குக் கிளம்ப, நண்பர்கள் டிக்கெட் வாங்கிக் கொடுத்து அவரை விமானம் ஏற்றியுள்ளனர். இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், ஜாகீரின் உடலை ஷிபானா பயணப்பட்ட அதே விமானத்திலேயே ஷிபானாவுக்குத் தெரிவிக்காமல் எடுத்துவந்துள்ளனர். ஊருக்கு வரும்வரையில் அவருக்கு இந்த விஷயம் தெரியவிடாமல் பார்த்துக்கொண்டுள்ளனர். உறவினர்களும் இதை அவருக்குத் தெரிவிக்காமல் இருக்க நேற்று ஷிபானா சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதன்பின்னேர அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஜாகீரின் உறவினர்கள் மூலமாகச் செய்திகளில் கசிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனது கணவருடன் மஸ்கட்டிற்கு முதல் விமானப் பயணத்தைக் கனவுடன் ஷிபானா மேற்கொண்ட நிலையில், மீண்டும் ஊர் திரும்பும்போது அவர் பயணித்த அதே விமானத்தின் சரக்குப் பிரிவில் ஜாகீரின் உடலும் பயணம் செய்துகொண்டிருந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.