இறக்குமதியாளர்களின் நட்டத்தை ஈடுசெய்ய தீர்மானம்!!

பருப்பு மற்றும் டின்மீன் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் அத்தியவசிய பொருள் இறக்குமதியாளர்களுக்கு இடையில் நேற்று(புதன்கிழமை) மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதற்கமைய இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் இழப்பினை வாராந்தம் ஈடு செய்வதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 65 ரூபாவாகவும் டின்மீனின் விலை 100 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பெரிய வெங்காயத்திற்கும் சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.