நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் – யாழ் மாவட்டச் செயலாளர்!!

யாழ் மாவட்டத்தில் உள்ள வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் உதவித் திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.


யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விவரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாக நேற்றைய தினம் திரட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது கோதுமை மா மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக இடர் முகாமைத்துவபிரிவிற்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க 407 மில்லியன் ரூபாய் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.