21 வயதான பிரித்தானியப் பெண் கொரோனா வைரஸால் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 21 வயதான பிரித்தானியப் பெண் உயிரிழந்துள்ளார்.


அவருக்கு எந்தவிதமான உடல்நிலைப் பிரச்சினையும் இதற்கு முன்னர் இருந்ததில்லை என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பக்கிங்கம்ஷையரின் ஹை விக்கம் (High Wycombe) பகுதியைச் சேர்ந்த சோலி மிடில்ரன் (Chloe Middleton) மார்ச் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

உயிழந்தவரின் தாயார் டயான் மிடில்ரன் சமூக ஊடகத்தில் கூறுகையில்; இந்த வைரஸ் குறித்து அனைவரும் தயவுசெய்து மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள்.

இந்த வைரஸ் எனது 21 வயது மகளின் உயிரைப் பறித்துள்ளது என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

நன்றி news.sky.com
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.