கொரோனா - காத்து கொள்ளும் வகையிலான முக்கிய அறிவுறுத்தல்கள்!


காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும்.


மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

முடியுமான வரை நீங்கள் மட்டும் தனியாக இருப்பதற்கு ஒரு அறையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

மற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு மீட்டருக்கும் அதிகமான தூரத்தை பராமரிக்கவும்.

முடியுமான வரை தனியான கழிப்பறை/குளியலறையை பயன்படுத்தவும். இல்லையென்றால், கழிப்பறை/குளியலறையைப் பயன்படுத்திய பின் அவற்றின் தாழ்ப்பாள் மற்றும் கைப்பிடிகளை சவர்க்காரம் பாவித்து கழுவவும்..

விருந்தினர்களை வீட்டுக்கு வரவழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்களும் பிற குடியிருப்பாளர்களும் முடியுமான வரை குறைந்தது இருபது வினாடிகள் சவர்க்காரம் உபயோகித்து கைகளை கழுவ வேண்டும்.

நீங்கள் உபயோகிக்கும் தட்டு, கோப்பை, துவாய் மற்றும் படுக்கை போன்றவற்றை மற்ற குடியிருப்பாளர்கள் பொருட்களுடன் சேராமல் தனியாக வைத்துக்கொள்ளவும். இவற்றை கழுவும் போதும் பிறரின் பொருட்களுடன் சேராமல் தனியாக சவர்க்காரம் பாவித்து கழுவவும்.


தும்மும் போது அல்லது இருமும் போது முழங்கையின் மூலம், அல்லது கைக்குட்டை / திசு கடதாசியில் வாயை மூடி தும்மவும். ஒரு முறை உபயோகித்த திசு கைக்குட்டையை மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்குள் வீசவும்.


நீங்கள் பயன்படுத்தும் முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை மீண்டும் பயன்படுத்தாமல் மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்குள் வீசவும்..


மிகவும் முக்கியமாக, நீங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் அல்லது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் என சந்தேகத்திற்கிடமான நபருடன் தொடர்பில் இருந்திருந்தால், உடனடியாக அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவும்.


மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 ஆலோசனை சேவையை நீங்கள் அணுகலாம்.
சிகிச்சைக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ள, 1990 மருத்துவ அவசர ஊர்தி சேவையைத் தொடர்பு கொள்ளவும்.
மேற்கண்ட அறிகுறிகளைக் கொண்ட, கடந்த 14 நாட்களுக்குள் எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்கு திரும்பியுள்ளவர்கள்,
அறிகுறிகள் தோன்றுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட கொவிட் 19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருத்தவர்கள்,
விசேட வைத்திய நிபுணரினால் கடுமையான நிமோனியா நோயுடையவர் என தீர்மானிக்கப்பட்ட பயண மற்றும் நோய்த் தொடர்பு வரலாற்றை கொண்டிராதவர்கள்,
உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையிலிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.