வெளிநாடொன்றில் 12 முதியவர்கள் கைவிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

உலகமெங்கும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், ஸ்பெயின் நாட்டில் கைவிடப்பட்ட முதியோர் 12 பேர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் முதியோருக்கு கொரோனா வைரஸ் எளிதாக தொற்றிக்கொள்ளும் என்பதால் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களின் நிலை குறித்து கண்டறிய அந்த நாட்டு அரசாங்கம் இராணுவ வீரர்களை பல்வேறு இடங்களுக்கு குழுவாக அனுப்பியது.

அத்துடன், முதியோர் இல்லங்களில் கிருமி நாசினிகளை தெளிக்கவும் இராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி தலைநகர் மாட்ரிட்டில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டபோது அங்குள்ள முதியோர் இல்லங்களை சுற்றி கிருமி நாசினி தெளித்த பின்னர், இல்லத்தின் உள்ளே கிருமி நாசினி தெளிக்க சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் பல இல்லங்களில் முதியவர்கள் கவனிக்க ஆளில்லாமல் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த நிலையில், ஒரு சில இல்லங்களில் முதியவர்கள் படுக்கையிலேயே இறந்து கிடந்தனர்.

Powered by Blogger.