தீவகப் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக்கில் சிகிச்சை பெறும் தீவகப் பகுதி மக்களுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் அவசர அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.


அதற்கமைய நாளை 27 ஆம் திகதி தீவகத்தைச் சேர்ந்த மருத்துவ கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரையிலான நேரத்திற்குள் 0212222268 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு விபரங்களை வழங்குமாரும் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு தெரிவிக்குமிடத்தே நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் அவர்களது பிரதேசத்திற்கு அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு பொதி செய்து அனுப்பி வைக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாளை தீவகப் பிரதேசத்திற்காக முதலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த நடவடிக்கை, தொடர்ந்தும் ஏனைய பிரதேசங்களுக்கும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனோ தொற்று தாக்கம் காணரமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.