'சிகரெட்' பிடிப்பவர்களுக்கு எச்சரிக்கை!!

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் தான் கொரோனா. எல்லா நாடுகளையும் அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ் புகைபிடிப்பவர்களை எளிதில் தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.


உலக சுகாதார நிறுவனம்(WHO) இந்த தகவலை உறுதி செய்துள்ளது. எனவே சிகரெட் புகைப்பவர்கள் கொரோனா வைரஸால் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என WHO எச்சரிக்கிறது.

புகைபிடிப்பவர்களின் நுரையீரல்கள் மற்றும் சுவாசக்குழல்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், SARS CoV-2 வைரசினால் எளிதில் பாதிக்கப்படுவர் இந்த வைரஸ், மனிதர்களிடத்தில் சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் போது, சுவாசித்தலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நான் ஒண்ணும் செயின் ஸ்மோக்கர் இல்லை, ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டு சிகரெட் தான் புடிக்கிறேன். எனக்கும் அந்த பாதிப்பு வருமானு கேட்குறவங்களுக்கு நிச்சயமா வரும் என்பதுதான் பதில்.

ஒரு சிகரெட் குடிச்சாலும், ஒரு பாக்கெட் குடித்தாலும் பாதிப்பு என்னவோ நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் தான். சிகரெட் பிடித்தாலே, பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

புகையிலை பயன்படுத்துவர்களை விட சிகரெட் குடிப்பவர்களை மட்டுமே கோவிட் 19 வைரஸ் அதிகம் பாதிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. புகையிலையை பயன்படுத்துவதால், வாய் புற்றுநோய் போன்றவையே ஏற்படும், ஆனால், சிகரட் புகைப்பதனால், நுரையீரல் நேரடியாக பாதிப்படைகிறது. இதன்காரணமாக, கோவிட் 19 தொற்று எளிதில் ஏற்பட காரணமாகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.