சிவனொளிபாத மலைக்கு தரிசிக்க சென்ற நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்றைய (01) தினம் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட குறித்த நபருக்கு சிகப்பு அம்பல பகுதியை அண்மிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நல்லதண்ணி பொலிஸார் அவரை அவசர அம்பியுலன்ஸ் சேவையில் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கையெடுத்தனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நாகந்த கெகரகே குணசேகர என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.