இரு நூல்கள் வெளியீடு!

திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளாரின் 'காலத்தின் தடங்கள்','மறைபொருள் நாடகங்கள்' ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ,யாழ்ப்பாணக் கலைத்தூது கலையக அரங்கில்  மாலை 4. மணிக்கு திருமறைக்கலா மன்றத்தின் பிரதி இயக்குனர் யோ.யோண்சன்ராஜ்குமார் தலைமையில் இடம் பெற்றது.



நிகழ்வு நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் பெரியோரின் மங்கள ஒளி யேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. செல்வி யோகனா தேவதாஸ் அவர்களினால் இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டது.  நூல் வெளியிட்டு நிகழ்வினை தலைமை ஏற்று  வழிப்படுத்திய   திருமறைக்கலா மன்றத்தின் பிரதி இயக்குனர் யோ.யோண்சன்ராஜ்குமாரின் தலைமையுரையினை தொடர்ந்து நூல் வெளியிட்டு நிகழ்விற்கு வந்தோரை வரவேற்கும் முகமாக திருமறைக்கலா மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர் இ.ஜெயகாந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது.
 தொடர்ந்து 'காலத்தின் தடங்கள்','மறைபொருள் நாடகங்கள்' ஆகிய இரண்டு நூல்களிற்கான  வெளியீட்டுரையினை திருமறைக்கலாமன்றத்தின் ஊடக இணைப்பாளர் செல்மர் எமில் நிகழ்த்த 'காலத்தின் தடங்கள்','மறைபொருள் நாடகங்கள்' ஆகிய இரண்டு நூல்கள் நிகழ்விற்கு ; முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்த வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனிhல் வெளீயிடு செய்து வைக்கப்பட sbc வங்கியின் முகமையாளர்  அரவிந்தன் 'காலத்தின் தடங்கள் நூலிற்கான முதற் பிரதியையும்,  ஊரனி பங்குத்தந்தை தேவராஜா அடிகளார் 'மறைபொருள் நாடகங்கள்' நூலிற்கான முதற் பிரதியையும் பெற்றுக் கொண்டார்.
 தொடர்ந்து சிறப்பு பிரதிகளினை விருந்தினர்கள்,மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் பெற்றுக் கொண்டனர். 'காலத்தின் தடங்கள் நூலிற்கான மதிப்புரையை மூத்த பத்திரிகையாளர் ச.ராதேயன்னும், 'மறைபொருள் நாடகங்கள்' நூலிற்கான மதிப்புரையை அருள்தந்தை செ.அன்புராசா அடிகளாரும் நிகழ்த்தினர். இறுதியாக எ.குமுதினியின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
Blogger இயக்குவது.