கொரோனாவால் ஏற்பட்டுள்ள நன்மைகள்!


கொரோனா மதுபான  கடைகளை மூடிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே இக்கட்டான நிலையிலும் நம்முடன் இருப்பார்கள் என எண்ண வைத்துள்ளது. ஆரோக்கியமான வீட்டு உணவுகளை சாப்பிட கொரோனா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தேவையற்ற செலவுகள் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.


அநியாயமாக சேர்த்த லஞ்சம், கறுப்பு பணம், பொன் பொருள் பயன்தராது என்ற நிலையை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. வீட்டு வேலைகளை பெண்களோடு இணைந்து ஆண்களும் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. புத்தகங்கள் படிக்க, எழுத நேரம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நாம் ஓடிஓடி சேர்த்த எந்த பொருளும் பயனற்றது என்ற உண்மையை உணர்த்தியுள்ளது. எந்த இக்கட்டான நிலையிலும் விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் உயர்ந்ததில்லை என எண்ணும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. உலகில் நட்பு, உறவுகளை விட்டு விலகி ஆடம்பர பொருட்களை சேர்த்தும் அவைகளால் பயனில்லை என்ற எண்ணம் உருவாகி உள்ளது.

 சிந்தனையில் நிதானம், தர்மம், மனிதநேயம், நேர்மை மறந்து சுயநலமாக திரிந்த மனிதர்களை கொரோனா சிந்திக்க வைத்துள்ளது. ஜாதியால், மதத்தால், நிறத்தால், பணத்தால்,தொழிலால் அதிகாரத்தால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, உலகில் பணக்கார நாடுகள், வல்லரசு நாடுகள், ஆயுதம் இருக்கும் நாடுகள், இயற்கை வளம் மிக்க நாடுகள் என்ற வேற்றுமைகளை களைந்து அனைவரும் ஒன்றுதான் என்று யோசிக்க வைத்துள்ளது கொரோனா!
newstm.in
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.