கொரோனா வைரஸ் தொற்று- பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சில விடயங்களை அறிவித்துள்ளார்.


அதன்படி,

ஒரு நாளில் ஒரு சில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள்.

அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

மன உளைச்சல் பசி, தூக்கம் என்பவற்றை பாதிக்கின்றது. உளநல ஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது

தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மன உளைச்சலுக்குள்ளாகி தம்நோயெதிர்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்ளாக்கி நோயெதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளை பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆகவே தேவையற்ற செய்திகளையும், வீடியோக்களையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒருசில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.