கொரோனா விழிப்புணர்வு- ஏன் சமூக விலகல் (Social Distancing) அவசியமாகிறது!!


சமூக விலகல் (Social Distancing)

ஒரு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் பாதிப்புக்கு உள்ளாவதைத் தவிர்க்கவும் சில வழிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைபிடித்தே ஆகவேண்டும். அதற்கு முடிந்தவரை வீட்டிலேயே தங்கி பொது இடங்கள், கடைகள், கூட்டம் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் சமூகத்தில் இருந்து விலகுதல் அவசியம். இதைத்தான் Social Distancing எனக் கூறுகின்றனர்.


கண்காணிப்பில் வைத்திருத்தல் (Quarantine)

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் என இந்திய அரசாங்கம் பலரை தனிமையில் வைத்திருக்கிறது. காரணம் இவர்களுக்கு நோய் தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர்களது வீடுகளிலேயே தனித்து இருக்குமாறு இந்த நபர்களை அறிவுறுத்தி இருக்கிறது இந்திய அரசு. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் அதிகமாக உரையாடிய நபர்களும் இப்படி தனிமையில் வைக்கப்படுகிறார்கள்.



தனிமைப்படுத்துதல் (Isolation)

கொரோனா வைரஸ் கிருமிகளின் அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துப் படுகின்றனர். அவர்கள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப் படவில்லையென்றாலும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தன்னைத் தானே தனிமைப்படுத்தல் (Self Isolation)

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டவர்கள், அல்லது தங்களுக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகம் கொண்டவர்கள் இப்படி தங்களைத் தாங்களாகவே சுயத் தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுத்திக் கொள்கின்றனர். தற்போது, சுய தனிப்படுத்தலும் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தங்களைத் தாங்களாகவே வீடுகளில் பலர் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

உணர்வுப்பூர்வ விலகல் (Emotional Distance)

கொரோனா பற்றியே எல்லா ஊடகங்களும் செய்தித்தாள்களும் பேசிவரும் வேளையில் (Emotional Distance) கூட அவசியமுள்ள ஒன்றாகவே கருதப்படுகிறது. அதாவது சமூக விலகலில் இருந்தும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதலை Emotional Distance என்பர். கொரோனா பற்றிய அழுத்தம், பயம் ஏற்படும் நிலையில் சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற எல்லாவற்றிலும் இருந்து தங்களை பாதுகாப்பான முறைகளில் தனிமையாக வைத்துக்கொள்வதும் இப்போதைக்கு அவசியமான ஒன்றுதான்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.