பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்திய பிரசாந்த் கிஷோர்!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு பல தலைவர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில், திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.


2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஐபேக் எனப்படும் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதுவரை திமுக சார்பான எந்த நிகழ்வுகளிலும் தலை காட்டாத பிரசாந்த் கிஷோர் முதன் முறையாக திமுக தொடர்புடைய நிகழ்வில் வெளிப்படையாகக் கலந்துகொண்டுள்ளார்.
ஸ்டாலினின் மருமகன் சபரீசனோடு பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய பின் புறப்பட்டார்.

பேராசிரியர் காலமான வருத்தத்திலும், ‘இவர்தான் திமுகவை ஜெயிக்க வைக்கப் போகும் பிரசாந்த் கிஷோரா?’ என்று ஆர்வமிகுதியோடு பல திமுகவினரும் அவரை பார்க்க போட்டி போட்டனர்.
-வேந்தன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.