‘சல்பேட்டா’ ஆர்யாவின் கதை?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சல்பேட்டா திரைப்படத்துக்காக, ஆர்யா தன்னை தயார்படுத்தும் வீடியோ வெளியாகி தமிழ் சினிமாவையே ஆட்கொண்டுவிட்டது.
சினிமாவுக்காக தங்கள் உடலை வருத்திக்கொள்ளும் எத்தனையோ ஹீரோக்களை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது, இப்போது பார்த்தும் வருகிறது. ஆனால், ஆர்யா மேற்கொள்ளும் பயிற்சிகள் மிகவும் மனதை வாட்டுவதாக அமைந்துள்ளன. ஆர்யாவின் இவ்வளவு கடினமான பயிற்சிகள் குறித்து சல்பேட்டா படக்குழுவினரிடம் விசாரிக்கும்போது கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.


சல்பேட்டா திரைப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டையைக் கற்றுக்கொள்வதற்கு இதுவரை தமிழ் சினிமாக்களில் காட்டப்பட்டது போல சிறு வயது கனவு, லட்சியம் ஆகிய காரணங்களின்றி அரசியல் காரணங்களை பின்புலமாக வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட வயது வரை உடலில் கவனம் இல்லாமல் ஊர் சுற்றி வரும் ஆர்யா, தன் வாழ்வின் ஒரு கட்டத்தில் எப்படி தனது உடலை முழுவதுமாக மாற்றி சமூகத்தில் நிலவும்

 அரசியலை எதிர்த்து போராடுகிறார் என்பதே படத்தின் கதை என்கின்றனர். இதற்காக பருமனான உடல் அமைப்புடன் இருந்து, பிறகு கடும் பயிற்சியில் ஈடுபட்டு கட்டுமஸ்தான உடலுடன் மாறியிருக்கிறார் ஆர்யா என்கின்றனர் படக்குழுவினர்.
கனவு, லட்சியம் ஆகியவற்றை மட்டுமில்லாமல் அரசியலையும் தாங்கிச் செல்வதாலோ, என்னவோ தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் ஆர்யாவின் உடலில் விழும் அடிகள் ஒன்றொன்றும் இடி போல விழுகின்றன.
-சிவா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.