பணத்தை விட ஆரோக்கியமே முக்கியம்

ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் சுவார்செனேகருக்கு அறிமுகம் தேவையில்லை. உடற்கட்டு கலைஞர், விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குநர், தொழிலதிபர், அரசியல்வாதி எனப் பன்முகத் தன்மை கொண்ட அர்னால்ட், தற்போது வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ மூலம் அவர் மற்றவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்.



அமெரிக்காவில் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கான மாநாடு எனும் நிகழ்ச்சி, அர்னால்ட் சுவார்செனேகரால் நடத்தப்படவிருந்தது. பாடிபில்டிங் போட்டியுடன் நடக்கவிருந்த இந்த நிகழ்வில் சுமார் 2,50,000 பேர் கலந்து கொள்ள இருந்தனர். இந்த நிகழ்வானது தற்போது கொரோனா பீதியின் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அர்னால்ட் ஒரு வீடியோ பதிவின் மூலமாகத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அர்னால்ட், “ அர்னால்ட் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கான மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாடிபில்டிங் போட்டி மட்டும் தற்போது நடத்தப்படும். மற்ற நிகழ்வுகளை தற்போதைக்கு தள்ளி வைத்தது மிகவும் வருத்தமான முடிவு, ஆனால் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் எனப் பலரின் வருத்தங்களையும் ஆலோசனைகளையும் கேட்ட பிறகு இந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சரியான முடிவு.


நாங்கள் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறோம், மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக நலமாக இருப்பதையே விரும்புகிறோம். ஆரோக்கியமாக இருப்பது தான் பணம் சம்பாதிப்பதை விட மிகவும் முதன்மையானது. எனவே அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள். மாநாடு நடத்தப்படுவதற்கான தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். நாளை கொலம்பஸில் நடக்க இருக்கும் பாடிபில்டிங் போட்டியில் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
It’s a sad day for me and everyone at the @ArnoldSports team. But we will always put our fans’ health first. After discussions with @GovMikeDeWine, @MayorGinther, and the CDC, we will be postponing the expo because we can’t risk bringing 250,000 people together with .
இதைப் பற்றி 1,890 பேர் பேசுகிறார்கள்

பவித்ரா குமரேசன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.