கோர முகம் கொண்ட பொம்பை மீண்டும் மிரட்ட வருகிறது

ஹாலிவுட் சினிமா படங்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆக்‌ஷன் ஹீரோக்களின் படத்திற்கு இருந்த மோகத்தை தன் பக்கம் திருப்பிய திகில் படமே இந்த காஞ்சூரிங்.


கடந்த 2013 ல் வந்த இந்த படம் நாற்காலியில் சாய்ந்தாடிக்கொண்டு கோர முகம் கொண்ட பொம்பை ஒன்று தத்ரூபமாக அனைவரையும் மிரட்டியது.

அமானுஷ்ய சம்பவம் நடக்கும் வீட்டில் எட் லொரையன் தம்பதி எப்படி பேயை சம்பாளிக்கின்றனர் என்பதே இந்த கதை.

20 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 320 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியது. 2016 ல் இரண்டாம் பாகம் வெளியாக வெற்றி பெற்றது.

தற்போது மூன்றாம் பாகமாக தி டேவில் மேட் மீ டூ இட் (The Devil Made Me Do It) என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் சேவ்ஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 11 ல் வெளியாகவுள்ளதாம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.