யேர்மனியின் பாதுகாப்பும் இராணுவ தளபாடங்களின் நிலைப்பாடும்
போர்வந்தால் யேர்மனியின் பாதுகாப்பு எவ்வளவு உறுதியானது என்பதை ZDF தொலைக்காட்சி ஆவணப்படுத்தியிருக்கிறது.
யேர்மனியஇராணுவம்வைத்திருக்கின்ற கவசவாகனங்களில் பல 30 வருடங்கள் பழமையானவை. அவற்றில் பலவற்றுக்கு உள்ளே வெளிச்சமூட்டும் மின்குமிழ்கள் திடீரென்று ஒளிராது நின்றுவிடுகின்றன. சுடுகுழல் முனை துருப்பிடித்ததனால் மாற்றவேண்டும் என விண்ணப்பிக்கப்பட்டு வருடக்கணக்காகியும் இன்னமும் பாதுகாப்பு அமைச்சின் பட்டியல் வந்துசேரவில்லையாம். மாதிரிப்பயிற்சியொன்றின்போது பல கவசவாகனங்கள் சாதாரண சேற்றுக்குள்ளேகூட ஓடமுடியாது நின்றபடி திணறுகின்றன.
யேர்மனியக் கடற்படையின் தாய்க்கப்பல் (நாசகாரி வகை) அனைத்துமே 60 வருடங்கள் பழமையானவை. அண்மையில் இந்தியாவிற்கு ரசியா வழங்கிய கப்பலும் இதே வகையானதே. இந்தியாவின் கடற்படைக்கு; அப்பாவித் தமிழக மீனவர்களைச் சுட்டுத்தள்ள மட்டுமே போர்க்கப்பல்கள் தேவையென்பதால் இவ்வகைகப்பல் உபயோகத்தின்பால் அதிகமானதே. ஆனால் யேர்மனி தன்னை ஆளுமைமிக்க அரசாக வைத்திருக்க இது உதவாது.
2016 இல் ஆப்கானில் பணிபுரிந்த இராணுவவீரன் ஒருவர் மனஉளைச்சல் காரணமாக இராணுவத்தை விட்டுவிலகிவந்து நேர்காணல் வழங்குகையில் , தன் கண்முன்னே தனது தோழன் எதிரிகளின் துப்பாக்கிவேட்டுக்கு இரையானதைத் தாங்கமுடியாதிருப்பதாகச் சொல்கிறார். திருப்பித்தாக்குதவதற்கு ஆரம்பித்துச் சிலநிமிடங்களில் தங்களது துப்பாக்கிகள் இறுகிவிடுவதாகச் சொல்கிறார்.
ஆபிரிக்காவில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இசுலாமியர் ஒருவரோடு நட்புடன் பழகியமையைக் காரணம்காட்டி அவரது நற்சான்றிதழ் மீளப்பெறப்பட்டு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதையும் சொல்கிறார்.
அதேபோல போர்விமானங்கள் உலங்குவானூர்திகள் ஆகியன மிகப்பழமையானவையாக இருக்கின்றன, கடற்கண்கணிப்பு விமானங்கள் சிலவற்றின் கைபிடிகளில் பழுப்பேறி பார்க்கச்சகிக்கமுடியாத நிலையில் இருக்கின்றன.
இதைவிடவும் யேர்மனிய மக்கள் தம்மை மதிப்பதில்லை என்ற மனக்குறையும் அவர்களுக்கு இருக்கிறது. அறிமுகப்பொருட்களுக்கான சந்தையொன்றில் இராணுவம் பற்றிய விளம்பரங்களோடு நின்ற வீரர்களை அங்கிருந்து வெளியேறும்படி சிலர் வாதிடுவதையும், போரும் இராணுவமும் தேவையில்லை என்று கூச்சலிடுவதையும் படம்பிடித்திருக்கிறார்கள். என்றாவது யேர்மனியின்மீது போர் திணிக்கப்பட்டால் என்னசெய்வது என்ற சாதாரண சிந்தனை கூட இப்போதுள்ள யேர்மனியத் தலைமுறைக்கு இல்லையென்றே எண்ணுகிறேன்.
ஆயுதத்தளவாடங்கள், மின்னுபகரணங்கள் ஆகியவற்றில் ஐரோப்பாவிலேயே பின்தங்கிய நிலையில் யேர்மனிய இராணுவம் இருப்பதாகச்சொல்லி ஆய்வு நிறைவுபெறுகிறது.
-தேவன்
யேர்மனி
28.03.2020