முன்னைநாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாயகத்தில் நிவாரண உதவி 📷

இன்றைய தினமும்  தாயகத்தில்  இளைஞர்கள் நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னைநாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமேனன் தலைமையில் சென்ற இளைஞர் குழுவினர்  150 குடும்பங்களுக்கு நான்கு நாட்களுக்கு போதுமான உலர் உணவுப் பொருட்களை  வழங்கி வைத்தனர்.

 வசாவிளான் குட்டியப்புலம் கிராமம் உடுவில் தாவடி அரியாலை பகுதிகளில்  பொருட்களை வழங்கி வைத்தனர்

 வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தினக்கூலி வேலை செய்து தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மக்கள் கொரோனா நோய்தொற்றினால் நடைமுறைப்படுத்த பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மிகுந்த கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் குறித்த உதவிகளை  பாதிக்கப்பட்ட மக்கள்  இளைஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழங்கி வைக்கப்பட்டது. 

 ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்தின் போது ராணுவ பொலீஸ் கெடுபிடிகள் மத்தியிலும் மக்களுக்காக இளைஞர்கள்தான் தற்போது களத்தில் வேலை செய்கின்றனர் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து உள்ளநிலையில் இளைஞர்களது செயற்பாடு மக்களுக்கு ஓரளவு ஆறுதலை கொடுக்கின்றது
Blogger இயக்குவது.