தாயகத்தில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் நிவாரணப் பணி📷

தாயகத்தில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.


கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் ஏற்கனவே கொடூர யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலை மிகவும் அவர்களை வறுமையில் வாட்டுகிறது இதனை கருத்தில்கொண்டு தன்னெழுச்சியாக பல இளைஞர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றனர் அந்த வகையில்  முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆகிய  கிருஷ்ணமீனன்  அவர்கள் இளைஞர்களை இணைத்து   மனிதாபிமானப் பணியில் மக்களோடு மக்களாக ஈடுபட்டுள்ளார்.

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" -

 என்னும் சுப்பிரமணிய பாரதியாரின் கவி வரிகளை முன்நிறுத்தி தமது நிவாரண பணியை முழு வீச்சாக வடக்கு கிழக்கு எங்கும் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மக்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது என்று இளைஞர்கள் அவா கொள்கின்றனர்.

 அன்றாட கூலி வேலை செய்து தமது வாழ்வாதாரத்தை நடத்திய மக்களின் பட்டினியை போக்க ஒருவாய் கஞ்சி குடிக்க ஆவது ஒருபிடி அரிசி கொடுப்போம். என்று இராணுவ பொலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் துணையோடு இந்த நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


நேற்றைய தினமும் இன்றைய தினமும்  இளையோரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணிகளின் பதிவுகள் இவை.

 ஒருவேளை உணவு கூட உண்ண முடியாமல் தவித்த இந்த தினக்கூலி செய்யும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை கிராமபுற மக்களுக்குஉதவி வழங்கப்பட்டது அந்த வகையில்....

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பத்தினருக்கும் நாவற்குழியில் புதிய குடியேற்ற திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட்ட 100 குடும்பங்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது .

பயனாளிகள் அனைவரும் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று தமது ஜீவனோபாயம் மேற்பட்டவர்கள் இவ்வாறு பலர் பட்டினியால் தவிக்கின்றனர் உங்களால் முடிந்தால் நீங்களும் பங்காளிகளாக மாறுங்கள்.

தொடர்புகளுக்கு
0770706691 krishnameenan
இரா மயூரதன் +94717108412
Blogger இயக்குவது.