அன்றைய ஏமாற்றம், இன்றைய வரலாறு!

கீர்த்தி சுரேஷ் என்றுமே ஆச்சர்யங்களுக்கும், சுவாரசியங்களுக்கும் பஞ்சமில்லாதவர். கமெர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்த கீர்த்தி, திடீரென சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருதை வென்றார்.
அதன்பின் தான், கமெர்ஷியல் உலகத்துக்குள்ளும் தனக்கான இடத்தை உருவாக்கவும், தன்னுடைய திறமையை வெளிப்படுத்தவும் கீர்த்தி எப்போதும் முயன்றதை ரசிகர்கள் அறிந்துகொண்டனர். நடிகையின் திறமை உடலிலோ, உடலின் அளவிலோ இல்லை என்பதை நிரூபித்த கீர்த்தி சுரேஷ், திடீரென மிகவும் மெலிந்த உடல்தோற்றத்துக்கு மாறினார். இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் ஏன் இந்த மாற்றம், பார்க்கவே விநோதமாக இருக்கிறதே என்றெல்லாம் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனைப் பொருட்படுத்தாமல் இருந்த கீர்த்தி சுரேஷ், அவர் நடித்துள்ள மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம் திரைப்படத்தில் தன்னுடைய புதிய கெட்-அப்பை ரிலீஸ் செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ஒரு நூற்றாண்டு வரையில் அரபிக் கடலின் எல்லைகளை மரைக்காயர்களின் இனம் பிரெஞ்சு படையெடுப்பிலிருந்து பாதுகாத்து நின்ற கதையையும், அவர்கள் எப்படி இந்திய சமூகத்துடன் பின்னாளில் இணைந்தனர் என்பதையும் இந்தத் திரைப்படம் பேசுகிறது. மரைக்காயராக மோஹன்லால் நடிக்கும் இத்திரைப்படத்தில், அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் தேர்ந்த நடிகர்களை மட்டுமே ஒவ்வொரு கேரக்டருக்கும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன். ‘அர்ச்சா’ என்ற இளம்பெண்ணின் கேரக்டரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், அந்த வயதுக்கேற்ப தன்னை வெளிப்படுத்துவதற்காகவே உடல் எடையைக் குறைத்திருக்கிறார் என்பதை, தற்போது வெளியாகும் ஃபோட்டோவின் மூலம் அறிந்த ரசிகர்கள் முன்பைவிட அதிகமாக கீர்த்தி சுரேஷின் கீர்த்தியை பாடத் தொடங்கியிருக்கின்றனர். -சிவா
Blogger இயக்குவது.