பேராசிரியர் மறைவு : ரஜினி இரங்கல்!

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.


தற்போது அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது உடலுக்கு மூத்த தலைவர்கள், பொதுமக்கள். திமுக நிர்வாகிகள் எனப் பலரும் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’பேராசிரியர் அவர்கள் அரசியல் வாழ்வில் சம்பாதித்தது இரண்டே இரண்டு தான். அவை மதிப்பும் மரியாதையும் தான். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் எனது அருமை நண்பர் தளபதியாருக்கும் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறினார்.

கவிபிரியா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.