இது ரஜினி மோடு!

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் புரோமோ பாடலை டிஸ்கவரி சானல் வெளியிட்டுள்ளது.

டிஸ்கவரி சானலில் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டாலும் உயிர் வாழ்ந்து தப்பிப்பது எப்படி என்பதை விளக்கும் அந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக சில பிரபலங்களும் பங்கு பெறுவது வழக்கம்.

ஏற்கனவே முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பிரதேசங்களில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ரஜினிகாந்த் பங்கேற்கும் அத்தியாயம் குறித்த புரோமோ பாடல் ஒன்றை டிஸ்கவரி சானல் வெளியிட்டுள்ளது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உற்சாக நடனமாடும் அந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
தமிழ், ஆங்கிலம் கலந்து வரிகள் அமைக்கப்பட்டிருக்கும் அந்தப் பாடலும், இசையும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாரு நேச்சரோட பிக்ச்சர்
டிவில பாக்கலாம். ஆல் ஓவர் நேஷன்
ஆன் எ ரஜினி மோடு, பியரோடு
வைல்டு போடு, ஏய் மச்சான்...மச்சான்
இந்த பாடலை ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

-இரா.பி. சுமி கிருஷ்ணா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.