சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம்-3 ரிலீஸ் எப்போது?

சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கியத் தகவலை இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.



2010-ஆம் ஆண்டு சிவா கதாநாயகனாக நடித்த ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். தமிழ் சினிமாவில் பல வருடகாலமாக காணப்பட்டுவந்த லாஜிக்கற்ற விஷயங்களைக் கிண்டல் செய்யும் விதமாக எடுக்கப்பட்டிருந்த ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.


தமிழ்ப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியானது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவை மட்டுமின்றி தமிழக அரசியலையும் கேலி, கிண்டல் செய்தது. முதல் பாகம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்ப்படம் 3 எப்போது வெளிவரும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.


ரசிகர் ஒருவர் டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்ப்படம் 3 வருமா?” என்று இயக்குநர் சி.எஸ்.அமுதனிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர் “2022-ஆம் ஆண்டு வெளியாகலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல், சினிமா என்று அனைத்தையும் கிண்டல் செய்த தமிழ்ப்படம் முதல் மற்றும் இரண்டாம் பாக வரிசையில் மூன்றாம் பாகம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.