19 கைதிகள் மட்டக்களப்பு சிறையிலிருந்து விடுவிப்பு!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 19 சிறைக்கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இத்தகவலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் , நீதிமன்ற நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்து சிறைக்கதிகளை பிணையில் விடுவிக்கும் நடவடிக்கையினையடுத்து நேற்று முன்தினம் முதற்கட்டமாக 162 சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்றும் இரண்டாம் கட்டமாக 19 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 181 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.