உலக சுகாதார அமைப்பின் தலைவருடன் ஜனாதிபதி பேச்சு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


இதன்போது தற்போதும் நிலவும் நெருக்கடியால் இலங்கையில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பான விடயங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் அணிதிரட்டியதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.