வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை அறிவிக்க இணையதளம்!!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இல்லாமல் தங்களது வீட்டிலிருப்பவர்கள் தொடர்பாக https://rakemuapi.cmb.ac.lk என்ற இணையதள முகவரிக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.


தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் முகமாகவும்,

கோவிட் -19 அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நோயாளிக்கும் அறிக்கை அளிக்கும்முகமாக ‘ரகிமுஅபி’ எனும் தொணிப்பொருளின் கீழ்'ஒன்லைன் சேவை' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த எவரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட மையங்களிலில்லாமல் தங்களது வீட்டிலிருப்பினும் அவர்கள் தொடர்பாகவும் https://rakemuapi.cmb.ac.lk என்ற இணையதள முகவரிக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இந்த இணையத்தளம் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.