கிளிநொச்சி வர்த்தகரால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் எஸ்கே. நாதன்  என்பவரால்  அங்குள்ள வறிய மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் நாளாந்தம் கூலித் தொழில் செய்து வாழ்ந்த குடும்பங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்யமுடியாது நெருக்கடியை சந்தித்திருந்தனர்.
அவர்களுக்கு அரசில் கட்சிகள் முதல் பல்வேறு அமைப்புக்கள், அரசு என பலரும் உதவிவருகின்றனர்.
இந்த நிலையில் எஸ்கே. நாதன் என்ற தனிநபர் இதுவரைக்கும் 7525 குடும்பங்களுக்கு ஒவ்வொன்று 900 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளார்.


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ச்சியாக இப் பணியை அவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
Blogger இயக்குவது.