மட்டக்களப்பில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம்!!

மட்டக்களப்பில் அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அரச சுற்றறிக்கைக்கு அமைய ஏப்ரல், மே மாதம் வரைக்குமாக தலா 25 ஆயிரம் ரூபாய் முற்பணம் உடனடியாக வழங்குமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அரச திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
பொதுநிர்வாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஓய்வூதியத் திணைக்களம் வழமைக்கு திரும்பும் வரை முற்பணமாப மாதத்துக்கு 25 ஆயிரம் வீதம் வழங்க்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக அமைச்சு விடுத்துள்ள 8/2020 சுற்றறிக்கையில் சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விதம் அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போர் தாம் கடைசியாக பணிபுரிந்த திணைக்களத்தின் தலைவரிடம் இதனை கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த முற்பண ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதில் ஏதாவது தடையிருந்தால் மாவட்டச் செயலகத்தின் செயலணி இலக்கமான 065-222-2235 உடன் தொடர்பு கொள்ளுமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அறிவித்துள்ளார்.
இதேபோல், இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்குரிய முற்பண ஓய்வூதியத்தை உடனடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறுசகல அரச திணைக்களங்களின் தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.