கொரோனாவை மறந்து கறி வாங்க திரண்ட சென்னை மக்கள்
கொரோனா ஊரடங்கை மறந்து மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் கறி வாங்க கூட்டம், கூட்டமாக திரண்டனர்.
சேலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால், மீன்கள், ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர்.
முகக் கவசம் அணியாமலும், ஒரே இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூட்டம், கூட்டமாக குவிந்தனா். சேலம் ஓமலூர் பிரதான சாலையில் அரபிக்கல்லூரி அருகே தற்காலிகமாக இறைச்சி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்கெட்டில் இறைச்சி எடுக்க பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அணிவகுத்து சென்றனர். எனவே அந்த சாலையில் அதிக நெருக்கடி காணப்பட்டது.
சென்னையிலும் பல இடங்களில் இறைச்சி கடைகளில் அதிக மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு கறி வாங்கி சென்றனர். கோவையிலும் பல பகுதிகளிலும் இதே நிலை தான் காணப்பட்டது.

.jpeg
)