அறிகுறி இல்லாமலும் கொரோனா வரும்
கேரளாவில் 19 நாட்களாக எந்த அறிகுறியும் இல்லாத மாணவி ஒருவருக்கு, கொரோனா உறுதியாகி இருப்பது மருத்துவ துறையை அதிர வைத்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் கொரோனா வைரசால், 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 74,000ஐ தாண்டி உள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500ஐ எட்டுகிறது. 114 பேர் பலியாகி இருக்கின்றனர். 326 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் 19 நாட்களாக எந்த அறிகுறியும் இல்லாத மாணவிக்கு, சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் படித்துக் கொண்டிருந்த கேரள மாணவி ஒருவர், சொந்த ஊரான பத்தனம் திட்டாவுக்கு கடந்த மாதம் 17ம் தேதி வந்தார். கொரோனா ஊரடங்குக்கு முன்பு சொந்த ஊர் வந்த போதிலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
19 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவுகள் மருத்துவ உலகையே அதிர வைத்துள்ளது. 19 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் தென்படாத சூழலில் தான் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. பொதுவாக இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 14 நாட்களில் அறிகுறிகள் தென்படும். அதை மனதில் கொண்டு தான் மருத்துவர்கள் சிகிச்சை தருகின்றனர்.
ஆனால் 19 நாட்களாக எந்த அறிகுறியும் தென்படாத அந்த மாணவிக்கு தற்போது கொரோனா தொற்று இருக்கிறது. இதை கண்ட மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

.jpeg
)