ஊரடங்கை கண்காணிக்கும் காண்டாமிருகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலி வாங்கிய இந்த வைரஸ், பன்னிரெண்டரை லட்சம் பேரை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை எப்படி தடுப்பது என்பது தெரியாமல் பல்வேறு முன்னணி உலக நாடுகளும் விழிபிதுங்கி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, நேபாளத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா..? என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா..? என்பதை கண்காணிக்கும் வகையில், காண்டாமிருகம் ஒன்று சாலையில் ரோந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நேபாளம் சித்வான் தேசிய பூங்கா அருகே எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சாலையில் செல்லும் நபர்களை, அந்த காண்டாமிருகம் துரத்துகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள், ஊரடங்கை காண்டாமிருகம் கண்காணித்து வருவதாக நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Blogger இயக்குவது.