தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மேலும் 85 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.
ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது உறுதியானது.
அவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது. இதனால் மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து தினந்தோறும் 50இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




