Corona எடப்பாடியின் அடுத்த அதிரடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அதை மக்கள் கண்டு கொள்ளாமல் நடமாடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்களின் எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, அதன் ஒரு கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு நிலை எப்படி இருக்கிறது, மேற்கொள்ளப்பட்ட சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பார் என்று தெரிகிறது.

Tags: #எடப்பாடி ஆலோசனை, #எடப்பாடி பழனிசாமி, #கொரோனா எடப்பாடி, #கொரோனா முதலமைச்சர், #டிரெண்டிங், #முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.